சுவரொட்டி
Suvarotti (தமிழ் சினிமா வரலாறு) (Tamil Edition)
(Kindle Edition)

3 products added to cart in last 30 minutes
MRP: ₹70.00 Checkout @ Amazon Last Updated: 19-Sep-2018 04:16:03 pm
✅ Lowest price available on Amazon

Related Categories

தமிழ்ச் சூழலில் அனுபவங்களை எழுதுவது மிகக் குறைவு. அதிலும் லட்சிய வாதத்தில் மாத்திரம் தோயாமல், கீழ்மை மேன்மைகளோடு தன்னைப் பதிவு செய்து கொள்பவர்கள் மிக மிகக்குறைவு. மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் சிதம்பர நினைவுகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட போது அதனுடைய வெளிப்படைத் தன்மைக்காக பெரிதும் பேசப்பட்டது, வரவேற்கப்பட்டது. கலாப்ரியாவின் “நினைவின் தாழ்வாரங்கள்” அதை விடப் பல மடங்கு கலையமைதி தோய்ந்த வெளிப்படைத் தன்மை கொண்டது. Triology போல கலாப்ரியாவின் “ நினைவின் தாழ்வாரங்கள்”, “ ஓடும் நதி”, “உருள் பெருந்தேர்” இந்த மூன்றையும் வரிசையாக வைத்து வாசிக்கலாம். அதனுடைய நீட்சியே இந்த ’சுவரொட்டி’ . தனது அனுபவங்களை வெற்றிகரமாகக் கலையாக்கும் போதே ஒரு கலைஞன் பரிணமிக்கிறான். இந்த “சுவரொட்டி” வழி நாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் கலையை, ரசனையை, பகடியை, பகட்டை, சாதாரண / அசாதாரண மனிதர்களின் எழுச்சியை, வீழ்ச்சியை, பகடையாட்டங்களை ஆடுபவர்களே காய்களாகும் சோகங்களை அறிய முடிகிறது. அனுபவங்களை கலாப்ரியாவினால் அநாயசமாகக் கலையாக்க முடிகிறது. வெயில் படர்ந்த அறுபதுகளின் திருநெல்வேலித் தெருக்களின் நம்மால் துல்லியமாக நடமாட முடிகிறது. அந்த தினத்தில், அந்தத் தெருவில் நடந்தவர்களின் முகக் கீறல் உட்பட நமக்குத் துலக்கமாகிறது. அது கலாப்ரியாவின் ஓர்மை.
- கவிஞர் சாம்ராஜ்
தமிழ் சினிமா தமிழ் வாழ்வோடு சம்பந்தப்பட்டு, அதைக்கட்டமைக்கும் காரணிகளில் ஒன்றாக ஆகி கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு ஆகிறது. சினிமாவையும் அதன் நாயக நாயகிகளையும் அதன் கதைகளையும் தாங்களாகவே வாழ்ந்து பார்த்த பலரை நான் பார்த்திருக்கிறேன். நானும் அதில் ஒருவனோ என்ற சந்தேகம் கூட உண்டு. இது உணர்வுபூர்வமான விஷயமாகப் படலாம். ஆனால் நிச்சயம் வாழ்வின் சாரம் இதில் இல்லாமல் இல்லை. அறிவுஜீவிகள் இதை
நகைப்பாகப் பார்க்கலாம். இருபது, முப்பது வருட சினிமா நிகழ்வுகளை, நினைவின் அடுக்குகளிலிருந்து பலரது வாழ்வின் சில பக்கங்களை எடுத்து, வாழ்வு பற்றிய பதிவாகவும் சினிமா பற்றிய ஒரு ஆவணப் பதிவாகவும் எழுதிப் பார்த்திருக்கிறேன். இது நினைவுக் குளத்தில் கரை மரத்தின் இலை விழுந்து எழும் அலை வட்டங்கள். ஒரு கல்லாக அமிழ்ந்து போகாமல், இலையாக நான் மிதந்து கொண்டிருக்கிறேன்.
- கவிஞர் கலாப்ரியா

Authorkalapria கலாப்ரியா
BindingKindle Edition
FormatKindle eBook
LanguageTamil
Language TypePublished
Number Of Pages170
Product GroupeBooks
Publication Date2017-12-25
Release Date2017-12-25
Sales Rank50197

Bestsellers in Cinema & Broadcast

Trending Products at this Moment

General information about சுவரொட்டி: Suvarotti (தமிழ் சினிமா வரலாறு) (Tamil Edition) Success