என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
(தமிழ் சினிமா கட்டுரைகள் Book 1)
(Kindle Edition)

6 products added to cart in last 30 minutes
MRP: ₹60.00 Checkout @ Amazon Last Updated: 13-Sep-2018 08:19:05 pm
✅ Lowest price available on Amazon

Related Categories
மதிப்புரை:
சொர்ணவேல் துனைப் பேராசிரியர், ஆங்கிலம் மற்றும் ஊடகத்துறை, மிச்சிகன் மாநிலப் பல்கலைக் கழகம், அமெரிக்கா.
”மிக அருமையான கட்டுரைகள் நிறைந்த தொகுப்பு. "இவள் இப்படித்தான்" மட்டுமே, அதற்கிணையான பல கட்டுரைகளை உள்ளடக்கிய, இந்த புத்தகத்தை ஒரு பொக்கிஷமாக ஆக்குகிறது.
அமெரிக்காவில் இத்தகைய புத்தகத்தை:
it was deemed to be "culturally significant" by the U.S. Library of Congress, and was selected for preservation, என்று அறிவித்துவிடுவார்கள்.
தமிழின் முன்னணிக் கவிஞர் கலாப்ரியாவின் என் உள்ளம் அழகான வெள்ளித்திரை தமிழ் சினிமா வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு அழகான கண்ணாடிமட்டுமல்ல ஒரு ஆழ்ந்த ரசிகனின் கோணத்திலிருந்து தமிழ் சினிமாவை அணுக, நமக்கு அவர் அளித்திருக்கும் ஒரு அபூர்வமான உருப்பெருக்கி ஆடி. ரசனை என்பது வாழ்வனுபவத்துடன் சேர்ந்து வாசிப்பது. பிரதியை வாசிப்பதற்கு இணையாக ரசிகனின் நுகர்வு எனும் முழுமையான விஷுவல் எக்ஸ்பீரியன்ஸ் முக்கியமானது.அத்தகைய உள்வாங்கும் தன்மை ரிசப்ஷன் தியரி என்கிற கோட்பாட்டின் மையம்.அந்த வகையில் மைய நீரோட்ட சினிமாவை நாம் அணுகவும் அதன் ஈர்ப்பின் பல்வேறு பரிமாணங்களை புரிந்து கொள்ளவும் கலாப்ரியாவின் உள்ளத்திரையில் ஓடும் இந்த வெள்ளித்திரை அனுபவங்கள் அரிதான வாசிப்பு இன்பத்தை அளிக்கின்றன.
எனது பெருவாரியான மற்ற இலக்கிய நண்பர்களைப் போலல்லாமல் தான் பார்த்து அனுபவித்த சினிமாவை நான் மதிக்கும் ஸென்ஸிடிவான ஒரு கவிஞர் தனது ரசனையின் ஒரு பகுதியாக அரவணைத்து முன் வைப்பது என்னைப் போன்ற சினிமாவில் மூழ்கியவர்களை நெகிழவைப்பது.அத்தகைய உண்மையின் ஒளியில்லாமல் பாப்புலர் கல்ச்சர் என்றும் பின்நவீனத்துவம் என்றும் கூச்சல் போடுவது வெத்துவேட்டு தான். ஒரு உன்னதக் கவிஞனின் சினிமா ரசனை சார்ந்த ஆத்மார்த்தமான பகிர்தல் ,அவர் என் போன்று நெல்லை செண்ட்ரல் பாப்புலர் அம்பை கிருஷ்ணா, முக்கூடல் சொக்கலால் தியேட்டர்களில் படம் பார்த்து வளர்ந்தவர்களுக்கு அளித்திருக்கும் கொடை. கவிஞருக்கே உரிய இயல்பான நடை. அவருடன் காத தூரம் நடந்து வந்து திரும்பிப் பார்க்கும் போது கடல் அலைகளினால் அடித்துச் செல்லப்பட்ட கால்த் தடங்களை மீட்டு அவருக்கே உரிய சித்திரமாகத் தீட்டி இருக்கிறது.

Authorகலாப்ரியா தி. க.
BindingKindle Edition
Edition1
FormatKindle eBook
LanguageTamil
Language TypePublished
Number Of Pages154
Product GroupeBooks
Publication Date2017-12-24
Release Date2017-12-24
Sales Rank57829

Bestsellers in Cinema & Broadcast

Trending Products at this Moment

General information about என் உள்ளம் அழகான வெள்ளித்திரை (தமிழ் சினிமா கட்டுரைகள் Book 1) (Tamil Edition) Success