சக்கரவாளக் கோட்டம்
Chakkaravalak Kottam (Tamil Edition)
(Kindle Edition)

6 products added to cart in last 30 minutes
MRP: ₹100.00 Checkout @ Amazon Last Updated: 15-Oct-2018 08:25:33 am
✅ Lowest price available on Amazon

Related Categories

5. கழுத்தை அறுத்துப் போட்ட
சேவலுக்குத் தெரியாது
தான் அங்குமிங்கும்
துள்ளித் துடிப்பது

O

நீர்நிலை

விரிந்த நீர்நிலை
நிலவு வழியும் இருளில்
சிறுசிறு முனகல்களைக் கிளர்த்தியபடி
நிர்வாணமாகப் படுத்துக்கிடக்கிறது
ஆழமே உள்ளடக்கமாகக்கொண்ட
எலுமிச்சை வாசனையுடைய
ஒரே அங்கத்தாலான உடலைக்
கைக் குவித்து அள்ளிப் பருகிடக்
கண்முன் விரிகிறது
பனிக்குடத்துக்குள் இருந்த காட்சி

O

வன்முறைக்கு எதிரான ஆலோசனைகள்

திட்டமிடப்பட்ட கொலையைப் போன்ற
நேர்த்திமிக்க செயல்கள் நிறைந்த வாழ்க்கையில்
கடவுளுக்கான இடத்தைக் கேலிசெய்பவர்களைப்
பயங்கரவாதிகளாக அறிவிக்கலாம்

ஒவ்வொரு மழைக்கால இரவிலும்
குழு வன்புணர்ச்சிக்கு ஆளாகிக் கொலைபடும்
தெருவோரப் பைத்தியங்களால் இந்நகரம்
பெரும்பழிக்கு ஆளாக நேர்வதைத்
தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வாக்களித்துப்
பெருமைதேடிச் சரிசெய்யலாம்

பொழுதுபோக்காகக் கொலைசெய்யும்
பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட இளைஞர்களை
ராணுவத்திற்கு அனுப்பி
மனநலம் பேணலாம்

ஓர் அரசன் நல்ல ராணுவம்
கொஞ்சம்போல அணு ஆயுதம் மற்றும் ஆணுறை
இவற்றைக்கொண்டு தமக்கான வாழ்க்கையை
நேர்த்திமிக்கதாக்கிக்கொள்ளும் வழிதெரியாதவர்களைக்
கடவுளுக்கு பலியிடலாம்
கருப்பாக இருப்பவர்களைக் கொன்றுவிடுவதன் மூலம்
பூமியின் மக்கள்தொகையை நான்கில் மூன்றாகக்
குறைக்கலாம் என்ற தீர்மானத்தை
ஐக்கிய நாடுகளின் சபையில் நிறைவேற்றுவதன் மூலம்
கற்பழிப்பு கொலை அணு ஆயுதம் இன்னபிற
சின்னத்தனங்களிலிருந்து ஒரு நாட்டின் அதிபரை
விடுதலை செய்யலாம்

O

இப்படித்தான் தோன்றினான் பிரம்மன்

திருத்தித்திருத்தி எழுதினேன் என்னை
திரும்பத்திரும்ப திருத்தங்கள் செய்தேன்
எழுத்தில் சொல்லில் வாக்கியங்களில்
இடைவெளிகளில் நிறுத்தற்புள்ளிகளில்
பொருள் மாற்றியும் வரிசை மாற்றியும்
பக்கங்கள் மாற்றியும்
அடித்ததும் சேர்த்ததும் அனேகப் பக்கங்கள்
ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும்
ஏதாவது ஒரு பிழை தட்டுப்பட்டபடி இருக்கிறது
ஏதோ ஒரு தருணத்தில்
எல்லாப் பக்கங்களும் புதிதாக இருக்கின்றன
இன்னும் பல பிழைகளுடன்
எந்த மூலப்பிரதியைப் படியெடுக்கும் முயற்சியிது
பிழையற்ற பக்கங்களை
உறுதிசெய்ய இதை எதனுடன்
ஒப்பிட்டுப் பார்ப்பது
எழுதியவற்றில் திருத்தம் செய்யத்
தொடங்கியதே முதல் பிழை
திருத்தம் செய்யாமல் நான் இருந்திருக்கலாம்
என்னை எழுதியவர்கள் கையிலேயே
பக்கங்களைத் தந்துவிட்டு
எழுதியவன் வந்து வாசிக்கும்போது
எல்லாம் எழுதியபடியே
இருப்பதைக் காணமுடியலாம்
எழுத்து முதல் பிழை
எழுதுதல் முதல் திருத்தம்

O

கடவுள்: செய்முறை விளக்கக் கையேடு

கடவுளைப் பழுது பார்ப்பதற்கான
கையேடு தேடி அலைந்தேன்
பிறகுதான் தெரிய வந்தேன்
கடவுள் பயன்படுத்தித் தூக்கியெறியும்
பொருட்களின் பட்டியலில் இருப்பதை
எனவே கடவுளை எப்படிக்
கையாள்வது எனத் தெரிந்துகொள்ள
பலவிதமான கருத்தரங்குகளில் பங்கேற்றேன்
எங்குமே எனக்கு உதவி கிட்டவில்லை
எனவே
எனக்கான கடவுளை
உனக்கான கடவுளை
இன்றைய நாளைய நேற்றைய
கடவுளை எப்படிச் செய்யலாம்
என்பது பற்றிய ஆய்வின்
முடிவாக நான் எழுதியதுதான்
கடவுளைச் செய்வதற்கான கையேடு

உலகில் எல்லா மொழிகளிலும்
மொழிபெயர்ப்பதற்கான வசதியோடு
தெளிந்த தமிழில் வெளியிட்டுள்ளேன்

உண்மையில் ஒவ்வொரு மனிதருக்கும்
ஒவ்வொரு வீட்டிற்கும் ஊருக்கும் நாட்டிற்கும்
தேவைப்படும் இக்கையேடு
சில சமயம் சாத்தானுக்கும் தேவைப்படலாம்

O

நான் செய்த தவறுகள்

என்னுடைய முதல் தவறு
கடவுளில்லாத உலகத்தில் பிறந்தது
இரண்டாவது தவறு
கடவுளை எனக்காக உருவாக்கிக்கொண்டது
மூன்றாவது தவறு
பால்பேதமற்றிருந்த கடவுளை
இரண்டாகப் பகுத்து
மனித சாயல் ஆண்-பெண் ஆக்கியது
நான்காவது கடைந்தெடுத்த முட்டாள்தனம்
இனப்பெருக்க உறுப்புக்களைத் தூண்டிவிட்டது
ஐந்தாவது தவறு
ஆண்கடவுளுக்கு ஆணுறை வழங்க மறந்தது
ஆறாவதாகக் குட்டிக் கடவுளைக் கொண்டுபோய்
பள்ளியில் சேர்த்தது
ஏழாவது தவறு எனது வீட்டுக்குப் பக்கத்திலேயே
கோயிலைக் கட்டிக் குடியமர்த்தியது
எட்டாவது தவறு என் துணைவியை
ஆண்கடவுளிடம் சோரம்போகவிட்டது
ஒன்பதாவது பெருந்தவறு
பழிவாங்கும் எண்ணத்தோடு பெண்கடவுளை
நான் வன்புணர்ச்சி செய்தது
பத்தாவது தவறு
என் துணைவியின் வயிற்றில்
கடவுள் உண்டானதையும்
பெண் கடவுளின் வயிற்றில்
மனிதர் உண்டானதையும்
கருவழிக்க மறந்தது
நான் செய்த பத்துத் தவறுகளுள்
எனக்கு மிகவும் பிடித்த தவறு
கடவுளை எனக்காக உருவாக்கியதுதான்

Authorரமேஷ் - பிரேம் Ramesh - Prem
BindingKindle Edition
FormatKindle eBook
LanguageTamil
Language TypePublished
Number Of Pages194
Product GroupeBooks
Publication Date2017-12-21
Release Date2017-12-21
Sales Rank143289

Bestsellers in Poetry

Trending Products at this Moment

General information about சக்கரவாளக் கோட்டம்: Chakkaravalak Kottam (Tamil Edition)