இளையராஜா
இசையின் தத்துவமும் அழகியலும்
(Kindle Edition)

4 products added to cart in last 30 minutes
MRP: ₹99.00 Checkout @ Amazon Last Updated: 12-Oct-2018 05:35:03 pm
✅ Lowest price available on Amazon

Related Categories

கி. ராவின் அணிந்துரை

இசையில்லாத ஒரு நாடகத்தையோ முக்கியமாக ஒரு திரைப்படத்தையோ தமிழனால் நினைத்துப் பார்க்க முடிவதில்லை.
இப்போது நாடகம் மட்டுந்தான்; முன்பெல்லாம் இசை மழை கொட்டும், "சங்கீத கோவலன் நாடகம்” இப்படி,
மூணாவதுபட்சம்தான் நடிப்பு!
ரெண்டாவது பேச்சு (வசனம்) சங்கீத நாடகம், நாட்டிய நாடகம், பேச்சு நாடகம் இப்படிப் பிரிக்கலாம்.
(நிஜ நாடகம் நேற்று வந்தது) பூர்வீக நாடகக் கலையாளர்களிடமிருந்து முளைத்து வந்த நமது திரைப்படத்துறைக்கு அதன்-முன்னதின்-ஜாடை அப்படியே இறங்கி வந்து விட்டதில் வியப்பேதும் இல்லை.
காலம் மாற மாற திரைப்படத்துறையில் பாட்டும் பேச்சும் வற்ற ஆரம்பித்தது. ஏட்டுநடைப் பேச்சாக இருந்த வசனம் மக்கள் மொழிப் பேச்சாக மாற ஆரம்பித்தது.
கவிதைத் துறை என்று இருப்பதுபோல திரைப்படத்துறை என்ற ஒரு புதிய துறை வந்தது.
இந்தப் பாடல்களுக்கு இசை அமைப்பது என்கிறநுண்கலையில் தேர்ந்த ஞானஸ்தர்கள் ஏற்பட்டார்கள். இதின் மூன்று வகைகள் உண்டு. 1. பாடல் இறங்கும்போதே இசையோடு வார்த்தையும் வர்ணமெட்டும் தாளத்தோடு ஜனிப்பது.
2. வர்ண மெட்டை உண்டாக்கிக் கொண்டு அதில் வார்த்தைகளைப் போட்டு அஞ்சறைப் பெட்டியில் சாமான்களை நிரப்புவதுபோல நிரப்புவது.
3. வந்த சாமான்களை வகைப்படுத்தி வைக்க அஞ்சறைப்பெட்டி செய்வதுபோல புதுசாக வர்ணமெட்டு அமைப்பது.
பாடலும் வர்ணமெட்டும் உன்னதமாக அமைந்துவிட்டால் தேவாமிர்தம் கிடைத்துவிட்டது போலத்தான்.
இந்தத் திரைஇசை அமைப்பாளர்கள் நமது சுயம்பான கர்னாடக ராகங்களை அல்லது அந்த ராகங்களின் சாயல்களைக் கையாளுகிற ‘மாஜிக்' இசை அறிந்தவரை பரவசப்படவும் வியக்கவும் வைத்துவிடும். பாபனாசம் சிவன் காலத்தில் ராகங்கள் தெரியும்படி மெட்டு அமைத்தார்கள் என்றால், அடுத்து வந்த தலைமுறைக்காரர்களான திரைஇசை விற்பன்னர்கள் ராகச் சாயல்களை இலைமறை கனியாக, கேட்பவர் மெய்மறந்து போகும்படியாக வர்ணமெட்டமைத்தார்கள். முக்காடு என்பது முகத்தை மறைக்கவே என்றாலும் அதே மறைப்பு முக அழகை அதிகப்படுத்தவே என்பதுபோல அமைந்தது அது. வித்வான்களிடம் குடி கொண்டிருக்கும் கர்னாடக இசை வர்ணமெட்டுகளைப் போல மக்களிடம் நாட்டுப்புற இசைவர்ண மெட்டுகள் ஏராளமாக உண்டு. அவைகளைத் தேடித் தேடி கவனம்செய்து மனசில் வாங்கி பதிவுசெய்துகொண்ட ஞானியரில் மகாஞானி நம்முடைய இளையராஜா அவர்கள். நமது மண்ணிலிருந்து முளைத்தவர் அவT.
பாடல்களுக்கு இசை அமைப்பது என்பதைப் போலவே காட்சிகளுக்குப் பின்னணிஇசை அமைப்பது என்கிற வித்தை பெரிதும் கைவரப்பெற்றவர். இதில் இவருக்கு நிகர் இவரே.
சலனப்படம் என்பது காட்சி ரூபம், ஒலிருபம் இரண்டும் சேர்ந்தது.
படம் பார்ப்பது, சலனம் கேட்பது, ஒர் ஒலி ரூபத்தைக் கொண்டு மனதிலோ திரையிலோ ஒரு காட்சியைக் கொண்டு வர முடியுமா. முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பூபாளம் இசைத்தால் அதிகாலை நேரம் மனக்கண்ணில் தோற்றமாகிறது.
ஒலி ஒரு காட்சியைக் கொண்டு வருவதுபோல மணம் (வாசம்) கூட மனக்கண்ணில் காட்சியைக் கொண்டு வரும். நாக்கில் படும் ருசியும் மனசினுள் ஒரு காட்சியைக் கொண்டுவந்து நிறுத்தும்.
புலன்கள் விந்தையானவை!இப்போது நவீன நாடகங்களில் ஒளி உத்தி அற்புதமாகப் பயன்படுத்தப்படுகிறது. திரை பிம்பங்களுக்கோ ஒலி உத்தி மிக அற்புதமாக கையாளப்படுகிறது. இந்தக் கலையை மிகச் சரியாக உயர்த்திக்காட்டியவர் பண்ணைப்புரத்து ராஜா அவர்கள்தான். இதில் அவர் செய்து காண்பித்த ஜால வித்தைகள் அர்ச்சுனன் கை பாணங்களுக்கு நிகரானவை.
* * *
‘கதை சொல்லி’ இதழுக்காக இசைஞானி அவர்களை ஒரு நேர்காணல் என்று பார்க்கச் சென்றுவந்த எழுத்துலக பிரம்மாக்களான பிரேமும் ரமேஷம், ஒரு பச்சிலைச் செடியைக் கொண்டுவரப் போன அனுமன் சஞ்சீவி மலையையே பெயர்த்துக் கொண்டு வந்ததுபோல ஏகப்பட்ட இசைச் செய்திகளோடு புதுவை திரும்பினார்கள். இந்த சிறிய புத்தகத்தைப்போல இன்னும் சில புத்தகங்கள் எழுத உள்ளார்கள் என்பது இப்போதைக்கு ஒரு செய்தி.
இளையராஜா அவர்களின் இசைப்படைப்புகள் பற்றி இப்புத்தகத்தில் ஓர் அளவே சொல்லப்பட்டிருக்கிறது.
எதிர்காலத்தில் இவர் கர்னாடக இசைக்கு-தமிழிசைக்கு பிரமாதமான புதிய புதிய வர்ணமெட்டுகள் செய்து தரப் போகிறார். இவைதான் இவர் இதுவரை படைத்திருக்கும் இசைப் படைப்புகளின் சிகரங்களாகத் திகழும் என்பது எனது நம்பிக்கை.
பிரியமுள்ள ராஜாவுக்கு எனது ஆசிகளும் வாழ்த்துகளும்.
இசைப்பித்தன் கி.ராஜநாராயணன்
28-11-1998 புதுவை – 8

Authorபிரேம் - ரமேஷ் Prem - Ramesh
BindingKindle Edition
FormatKindle eBook
LanguageTamil
Language TypePublished
Number Of Pages107
Product GroupeBooks
Publication Date2017-12-05
Release Date2017-12-05
Sales Rank67504

Bestsellers in Music

Trending Products at this Moment

General information about இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்: Illyaraja: Philosophy and Aesthetics of Music (Tamil Edition)