எந்த ஒரு மொழியையும் எளிதாகக் கற்றுக்கொள்வது எப்படி? / Entha Oru Mozhiyaium Elithagak Katrukkolvathu Eppadi?
(Tamil Edition) / How to learn any language quickly and successfully in tamil
(Kindle Edition)

4 products added to cart in last 30 minutes
MRP: ₹49.00 Checkout @ Amazon Last Updated: 13-Sep-2018 08:02:59 pm
✅ Lowest price available on Amazon

Related Categories

ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புவர்கள் அனைவரும் கைவசம் வைத்திருக்க வேண்டிய அவசியமானதும், அத்தியாவசியமானதுமான ஒரு நூல் இந்த நூல். ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் என்ன, எந்தெந்த வழிகளில் எல்லாம் ஒரு மொழியைத் திறன்பட எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும். அதற்கான வசதிகளும், வாய்ப்புகளும் என்னென்ன என்பதைப் பற்றியெல்லாம் இந்த நூல் பேசுகிறது.
அனைவருக்கும் புரியும் வகையில் தெளிவான, எளிமையான தமிழ் நடையிலேயே இந்தப் புத்தகம் எழுதப் பட்டுள்ளது. இதில் பல்வேறு தலைப்புகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒரு சில உங்கள் பார்வைக்கு

1. குழந்தையைப் போல் கற்றுக்கொள்ளுங்கள்
2. உற்ற துணையைத் தேர்ந்தெடுங்கள் (FIND A PARTNER)
3. செய்தித் தாள்கள் (NEWS PAPER) படிப்பது சரியாʔ
4. புதிய மொழியைக் கற்றுக் கொள்ள உதவும் இணையதளங்கள்

இது மட்டும் அல்லாமல் இன்னும் பல தலைப்புகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்தப் புத்தகத்தைப் பற்றிய ஒரு சிறிய முன்னுரை இதோ

எந்த ஒரு மொழியையுமே நாம் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம். அதற்குத் தேவை ஆர்வமும், விடாமுயற்சியும் தான். மண்ணில் ஆழ வேரூண்றி வளர்ந்து நிற்கும் ஆலமரம் போல உள்ளத்தில் ஒரு மொழியைக் கற்க வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றி வளர வேண்டும். நம்முடைய மனதில் அதனைக் கற்றே ஆக வேண்டும் என்கிற ஒரு தீவிரமான, விடாப்பிடியான எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

எப்பாடுபட்டாவது இந்த மொழியைக் கற்றே தீருவேன். இந்த முயற்சியில் எவ்வித இடையூறுகள், தடங்கல்கள், சிரமங்கள் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாது கருமமே கண்ணாயிருப்பேன். சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறியே தீருவேன். தடைகள் பல வந்தாலும் அதனைத் தாண்டிக் குதித்து வெற்றி நடை போடுவேனே தவிர துவண்டு வீழ்ந்துவிடமாட்டேன் என்ற வைராக்கியமான எண்ணத்தை மனதில் ஆழமாகப் பதித்துக் கொள்ள வேண்டும்.
இந்த உறுதியான எண்ணத்திற்கு நாம் எண்ணெய் விட்டு அதனை ஒரு எரிதனலாக மாற்ற வேண்டும். இந்த எண்ணம் தான் செயலாக உருப்பெற்று நாளடைவில் நம்முடைய இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும். எண்ணம் மாத்திரம் இருந்தால் போதுமா அதனை செயல்படுத்த வேண்டுமே! இனி அதனை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதைப் பார்க்கலாம்.

AuthorNagaraj A
BindingKindle Edition
Edition1
FormatKindle eBook
LanguageTamil
Language TypePublished
Number Of Pages40
Product GroupeBooks
Publication Date2017-12-04
Release Date2017-12-04
Sales Rank53764

Bestsellers in Language Learning & Teaching

Trending Products at this Moment

General information about எந்த ஒரு மொழியையும் எளிதாகக் கற்றுக்கொள்வது எப்படி? / Entha Oru Mozhiyaium Elithagak Katrukkolvathu Eppadi? (Tamil Edition) / How to learn any language quickly and successfully in tamil Success