சமையலறையில் கல்லறை
விசமாகும் உணவுகள்
(Kindle Edition)

2 products added to cart in last 30 minutes
MRP: ₹118.00 Checkout @ Amazon Last Updated: 14-Oct-2018 04:41:44 pm
✅ Lowest price available on Amazon

Related Categories

மனிதனின் அடிப்படை பிறப்புரிமைகளில் உணவு பிரதானமானது. உண்ணும் உணவு குறித்த விழிப்புணர்ச்சியும் கூட பிறப்புரிமைகளில் ஒன்றாகிவிட்ட காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சாப்பிடும் உணவுகளில் கலப்படம் என்பது பல நிலைகளில் நடந்தேறுகிறது. நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளும் கலப்படம் செய்யப்பட்டவைதானா என்று எதிர்க் கேள்வி வைப்பதை விட, சாப்பிடும் உணவுப் பொருட்களில் எப்படியான சங்கதிகள் இருக்கின்றன, கலக்கப்படுகின்றன என்பதைக் குறித்த விழிப்புணர்ச்சி பெறுவது சிறப்பானது. அப்படியான ஒரு விழிப்புணர்ச்சியை உண்டாக்கிடவே இந்தப் புத்தகம்.

பாதுகாப்பான முறையில், உடல் ஆரோக்கியத்திற்குண்டான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும், தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் மத்தியில் கண்களுக்கு புலப்படாத புல்லுருவிகளைப் போல போலி நிறுவனங்களும், கள்ள நெஞ்சங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இந்தப் புல்லுருவிகளே நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களின் தரத்தில் விளையாடக் கூடியவை. உணவின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்ச்சியில் கவனத்தை குவிக்க வேண்டியதற்கான அவசியமும் இத்தகைய புல்லுருவிகளின் சட்ட விரோத செயல்பாடுகளின் வழியாகவே எழுகிறது.

இன்றைய நவீன மனிதன் காலை எழுந்தது தொடங்கி இரவு உறங்கச் செல்லும் நொடி வரை வயிற்றுக்கு என்று எடுத்துக்கொள்ளும் உணவுகளில் எப்படியான இரசாயன மற்றும் போலி உணவுப் பொருட்களின் கலப்படங்கள் புல்லுருவிகளால் நிகழ்த்தப்படுகின்றன என்பதை கிரியேட்டிவ் நான்-பிக்சன் எழுத்து வகை வழி இந்தப் புத்தகத்தில் பேசியிருக்கிறோம். தற்போது நியூசிலாந்தில் இருக்கும் எனது சக எழுத்தாள தோழி வர்ஷினி இந்தப் புத்தகத்தின் மற்றொரு பகுதியான மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களின் பாதகங்களைக் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்.

AuthorVarshini Tripura Naveena Alexander
BindingKindle Edition
FormatKindle eBook
LanguageTamil
Language TypePublished
Number Of Pages128
Product GroupeBooks
Publication Date2017-07-01
Publisherஅந்தாழை
Release Date2017-07-01
Studioஅந்தாழை
Sales Rank97619

Bestsellers in Food, Drink & Entertaining

Trending Products at this Moment

General information about சமையலறையில் கல்லறை: விசமாகும் உணவுகள்: Samayal Arayil Kallarai (Tamil Edition)